ஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதன் எஸ்.சி. அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி
இந்த தொடரில் இன்றும் நாளையும் ஓய்வு நாளாகும்.;
image courtesy:twitter/@eastbengal_fc
கொல்கத்தா,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முகமதன் எஸ்.சி. - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஈஸ்ட் பெங்கால் 3-1 என்ற கோல் கணக்கில் முகமதன் எஸ்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஈஸ்ட் பெங்கால் தரப்பில் மகேஷ் சிங், சவும் கிரெஸ்போ மற்றும் டேவிட் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். முகமதன் தரப்பில் பிரன்கா மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
இந்த தொடரில் இன்றும் நாளையும் ஓய்வு நாளாகும்.