ஆஸ்திரேலிய தொடர்: இந்திய ஆக்கி அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா - இந்தியா ஆக்கி அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி 15-ம் தேதி நடைபெறுகிறது.;

Update:2025-08-05 06:15 IST

image courtesy:PTI

புதுடெல்லி,

இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான 24 வீரர்கள் கொண்ட இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நீடிக்கிறார். தமிழக வீரர் செல்வம் கார்த்தி அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:-

கோல்கீப்பர்கள்: கிருஷ்ணன் பதாக், சுரஜ் கார்கெர்,

பின்களம்: சுமித், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), சஞ்சய், அமித் ரோஹிதாஸ், நீலம் சஞ்சீப் செஸ், ஜூக்ராஜ் சிங், பூவன்னா, ஜர்மன்பிரீத் சிங்

நடுகளம்: ராஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ரபிசந்திர சிங் மொய்ராங்தெம், விஷ்ணுகாந்த் சிங்,

முன்களம்: மன்தீப் சிங், ஷிலானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங், ஆதித்யா லாலேஜ், செல்வம் கார்த்தி.

Tags:    

மேலும் செய்திகள்