ஆக்கி இந்தியா லீக்: ஐதராபாத் அணியை வீழ்த்தி கோனாசிகா வெற்றி

இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் சமனில் முடிந்தது.;

Update:2025-01-28 23:31 IST

image courtesy:twitter/@HockeyIndiaLeag

ரூர்கேலா,

8 அணிகள் இடையிலான ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் டூபான்ஸ் - கோனாசிகா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் கோனாசிகா 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்