ஆக்கி இந்தியா லீக்: கோனாசிகா, ஐதராபாத் அணிகள் வெற்றி

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.;

Update:2025-01-25 23:26 IST

image courtesy:twitter/@HockeyIndiaLeag

ரூர்கேலா,

8 அணிகள் இடையிலான ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

அதன்படி மாலை 6 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ்- கோனாசிகா அணிகள் மோதின. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் கோனாசிகா அணி வெற்றி பெற்றது.

இரவு 8.15 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் டூபான்ஸ்- உ.பி. ருத்ராஸ் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் 3-1 என்ற கோல் கணக்கில் உ.பி.ருத்ராஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்