தேசிய சீனியர் மகளிர் ஆக்கி: அரியானா, மராட்டியம், மத்தியபிரதேச அணிகள் வெற்றி

இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.;

Update:2025-03-07 08:43 IST

image courtesy:twitter/@TheHockeyIndia

பஞ்ச்குலா,

தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் 'ஏ', 'பி', 'சி' என்று மூன்று டிவிசனாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் பீகார் அணியை வீழ்த்தி தெலுங்கானாவும், பெங்காலை வீழ்த்தி மத்திய பிரதேச அணியும், மணிப்பூரை வீழ்த்தி மராட்டியமும், ஒடிசாவை வீழ்த்தி அரியானா அணியும் வெற்றியை பதிவு செய்துள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்