தேசிய சப்-ஜூனியர் ஆக்கி: அரையிறுதியில் பஞ்சாப்

15-வது தேசிய சப்-ஜூனியர் ஆக்கி (17 வயதுக்கு உட்பட்டோர்) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் நடந்து வருகிறது.;

Update:2025-08-06 08:45 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 15-வது தேசிய சப்-ஜூனியர் ஆக்கி (17 வயதுக்கு உட்பட்டோர்) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 29 அணிகள் 3 டிவிசனாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

நேற்று நடந்த 'ஏ' டிவிசன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உத்தரபிரதேச அணி 4-1 என்ற கோல் கணக்கில் டாமன் டையூவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதியில் பஞ்சாப் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பதம் பார்த்து அரையிறுதியை எட்டியது.

மற்ற ஆட்டங்களில் ஜார்கண்ட் அணி 13-0 என்ற கோல் கணக்கில் சண்டிகாரையும், மத்திய பிரதேச அணி 2-1 என்ற கோல் கணக்கில் அரியானாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் உத்தரபிரதேசம்- பஞ்சாப் (காலை 10 மணி), மத்தியபிரதேசம்-ஜார்கண்ட் (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்