ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இலங்கையை வீழ்த்திய இந்தியா
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நேற்று தொடங்கியது.;
கோப்புப்படம்
சோலோ,
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி 110-69 என்ற புள்ளி கணக்கில் இலங்கையை தோற்கடித்து போட்டியை வெற்றியோடு தொடங்கியது.
கலப்பு இரட்டையர் பிரிவில் விஷ்ணு கோட் மற்றும் ரேஷிகா யூ ஜோடி, கெனெத் அருகோடா மற்றும் இசுரி அத்தநாயக்க ஜோடியை 11-5 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் ஆட்டத்தை தொடங்கியது. ரிலே பாயிண்ட் முறையில், ஒரு அணி வெற்றி பெற 110 புள்ளிகளைப் பெற வேண்டியிருந்தது.
காயத்ரி மற்றும் மான்சா ராவத் ஆகியோர் அட்டநாயக்க மற்றும் சித்துமி டி சில்வாவுக்கு எதிராக இந்தியாவின் முன்னிலையை 22-14 ஆக உயர்த்தினர். இறுதியில் இந்திய அணி 110-69 என்ற புள்ளி கணக்கில் இலங்கையை தோற்கடித்து போட்டியை வெற்றியோடு தொடங்கியது.