ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி சென்னையில் நடக்கிறது

23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.;

Update:2025-09-22 02:00 IST

கோப்புப்படம்

சென்னை,

இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

35 வயதுக்கு மேற்பட்டோருக்கான இந்த போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். முதலில் இந்தோனேசியாவில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த போட்டி பிறகு இந்தியாவுக்கு மாற்றப்பட்டது.

நவீன விளையாட்டு வசதிகள் மற்றும் தமிழக அரசின் உறுதியான ஆதரவுடன் சென்னையில் இந்த போட்டி நடக்க இருப்பதாக இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்க பொதுச் செயலாளர் டேவிட் பிரேம்நாத் தெரிவித்தார். இந்த போட்டிக்கான தூதராக நடிகர் ஆர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்