கனடா ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோ

இறுதிப்போட்டியில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோ, அமெரிக்காவின் விக்டர் லாய் உடன் மோதினார்.;

Update:2025-07-08 09:19 IST

கோப்புப்படம்

கால்கரி,

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கால்கரி நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோ, அமெரிக்காவின் விக்டர் லாய் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கென்டா நிஷிமோட்டோ 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் விக்டர் லாயை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்