புரோ கபடி லீக் : பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.;

Update:2025-10-17 11:15 IST

Image Courtesy: @ProKabaddi

புதுடெல்லி,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்க நடக்கின்றன.

அதன்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

இதையடுத்து இரவு 9.30 மணிக்கு தொடங்கும் 3வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் தபாங் டெல்லி அணி 2வது இடத்தில் உள்ளது.

மேலும், தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், உ.பி.யோத்தாஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் 8 முதல் 12 இடங்களில் உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்