புரோ கபடி லீக்; பாட்னாவை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ்
இன்று நடந்து வரும் மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா - உ.பி.யோத்தாஸ் அணிகள் ஆடி வருகின்றன.;
Image Courtesy: @ProKabaddi
புதுடெல்லி,
புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது.
அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் இறுதிகட்டத்தில் அபாரமாக செயல்பட்ட அரியானா அணி 39-32 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இன்று நடந்து வரும் மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா - உ.பி.யோத்தாஸ் அணிகள் ஆடி வருகின்றன.