புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்திய புனேரி பால்டன்

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-10-15 21:49 IST

Image Courtesy: @ProKabaddi

புதுடெல்லி,

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் டைபிரேக்கர் முறையில் 45-45 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது.

இதையடுத்து இரவு 8.30 மணிக்கு தொடங்கிய 2வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே புனே அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியது.

இறுதியில் இந்த மோதலில் 57-33 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் 3வது ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் ஆடி வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்