புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்

பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி நடக்கும் இடத்தை புரோ கபடி லீக் நிர்வாகம் நேற்று அறிவித்தது.;

Update:2025-10-11 13:08 IST

Image Courtesy: @ProKabaddi

புதுடெல்லி,

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்ததொடரில் சென்னையில் நடந்து வந்த லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், அடுத்த கட்ட ஆட்டங்கள் டெல்லியில் இன்று தொடங்குகிறது.

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. அதன்படி இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- ஜெயப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்- புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி நடக்கும் இடத்தை புரோ கபடி லீக் நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதன்படி வருகிற 25-ந் தேதி தொடங்கும் பிளே-ஆப் சுற்று மற்றும் 31-ந் தேதி அரங்கேறும் இறுதிப்போட்டி டெல்லியில் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்