ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஜன்னிக் சின்னெர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.;

Update:2025-01-18 16:59 IST

Image Courtesy: AFP / Jannik Sinner 

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், அமெரிக்காவின் மார்கோஸ் கிரோன் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னெர் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்கோஸ் கிரோனை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். வரும் 20ம் தேதி நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர், செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக் அல்லது டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே ஆகிய இருவரில் ஒருவரை எதிர்கொள்வார்.

Tags:    

மேலும் செய்திகள்