பெர்லின் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு வீராங்கனை

இறுதிப்போட்டியில் செக் குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா, சீனாவின் வாங் சின்யு உடன் மோதினார்.;

Update:2025-06-23 11:12 IST

Image Courtesy: @WTA

பெர்லின்,

மகளிர் மட்டும் பங்கேற்ற பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் செக் குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா, சீனாவின் வாங் சின்யு உடன் மோதினார்.

இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (12-10) என்ற புள்ளிக்கணக்கில் வோண்ட்ரூசோவாவும், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வாங் சின்யு-ம் கைப்பற்றினர்.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வோண்ட்ரூசோவா 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வாங் சின்யுவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.  

Tags:    

மேலும் செய்திகள்