பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.;

Update:2025-01-04 18:25 IST

Image Courtesy: AFP / Aryna Sabalenka 

பிரிஸ்பேன்,

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சபலென்கா, ரஷியாவின் போலினா குடெர்மெட்டோவா உடன் மோத உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்