கனடா ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வி கண்ட ஆண்ட்ரே ரூப்லெவ்
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
டொராண்டோ,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷியா) - டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.
இந்த மோதல் விறுவிறுப்பாக செல்லும் என எதிரபார்த்த வேளையில், இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட டெய்லர் பிரிட்ஸ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவை விழித்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.