கனடா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பென் ஷெல்டன்

கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;

Update:2025-08-04 08:00 IST

கோப்புப்படம்

டொராண்டோ,

கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான பென் ஷெல்டன் (அமெரிக்கா), இத்தாலியின் பிளேவியோ கோபோலி உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய பென் ஷெல்டன் 6-4, 4-6, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் பிளேவியோ கோபோலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்