கனடா ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-07-30 11:34 IST

image courtesy:twitter/@rolandgarros

டொரன்டோ,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), சக நாட்டவரான டேனியல் காலின்ஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கோகோ காப்பும், 2வது செட்டை 64 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் காலின்ஸும் கைப்பற்றினர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.

இதில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் இந்த செட்டில் 7-6 (7-2) என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் காலின்ஸை வீழ்த்தி கோகோ காப் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்