கனடா ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

கோகோ காப் 4-வது சுற்றில் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.;

Update:2025-08-03 06:50 IST

image courtesy:twitter/@OBNmontreal

டொராண்டோ,

பல முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

இதில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய விக்டோரியா எம்போகோ 6-1 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் கோகோ காபை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதிர்ச்சி தோல்வியடைந்த கோகோ காப் தொடரிலிருந்து வெளியேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்