கனடா ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் கோகோ காப் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
டொராண்டோ,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் - மெக்கார்ட்னி கெஸ்லர் ஜோடி, ஓல்கா டானிலோவிக் (செர்பியா) - ஹ்சீஹ் சு-வேய் (தைவான்) ஜோடியை எதிர்கொண்டது.
இந்த மோதலில் முதல் செட்டை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப் ஜோடி, அடுத்த இரு செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதன் காரணமாக ஆட்டத்தின் 2வது மற்றும் 3வது செட்டை 6-4, 10-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய கோகோ காப் ஜோடி ஓல்கா டானிலோவிக் (செர்பியா) - ஹ்சீஹ் சு-வேய் (தைவான்) ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.