கனடா ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வி கண்ட இகா ஸ்வியாடெக்
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
டொராண்டோ,
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), டென்மார்க்கின் கிளாரா டவுசன் உடன் மோதினார்.
இந்த மோதலில் அனுபவம் வாய்ந்த ஸ்வியாடெக் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6-7 (1-7), 3-6 என்ற செட் கணக்கில் கிளாரா டவுசனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். வெற்றி பெற்ற கிளாரா டவுசன் காலிறுதிக்கு முன்னேறினார்.