கனடா ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பவுசாஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
டொராண்டோ,
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் ஜெசிகா பவுசாஸ் மற்றும் சீனாவின் ஜு லின் ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ஜெசிகா பவுசாஸும், 2வது செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் ஜு லின்னும் கைப்பற்றினர். இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.
இதில் அபாரமாக செயல்பட்ட ஜெசிகா பவுசாஸ் 6-2 என்ற புள்ளிக்கணக்கில் ஜு லின்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். தோல்வி கண்ட ஜு லின் தொடரில் இருந்து வெளியேறினார்.