கனடா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் மரியா சக்காரி

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-07-29 11:00 IST

கோப்புப்படம்

டொரன்டோ,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மரியா சக்காரி (கிரீஸ்), கனடாவின் கார்சன் பிரான்ஸ்டைன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் மரியா சக்காரியும், 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கார்சன் பிரான்ஸ்டைனும் கைப்பற்றினர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த மரியா சக்காரி 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்