கனடா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் விக்டோரியா எம்போகோ

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;

Update:2025-08-05 15:53 IST

கோப்புப்படம்

டொராண்டோ,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கனடாவின் விக்டோரியா எம்போகோ, ஸ்பெயினின் ஜெசிகா பவுசாஸ் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய விக்டோரியா எம்போகோ 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பவுசாஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்