கனடா ஓபன் டென்னிஸ்: ஸ்வெரெவ் காலிறுதிக்கு தகுதி

இவர் 4-வது சுற்றில் பிரான்சிஸ்கோ செருண்டோலோ உடன் மோதினார்.;

Update:2025-08-03 11:20 IST

image courtesy:instagram/alexzverev123

டொராண்டோ,

பல முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்வெரெவ் (ஜெர்மனி) - பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெண்டினா) மோதினர்.

இதில் முதல் செட்டை ஸ்வெரெவ் எளிதில் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற 2-வது செட்டின்போது பிரான்சிஸ்கோ செருண்டோலோ காயமடைந்தார். அவரால் ஆட்டத்தை தொடர முடியாமல் போனது. இதன் காரணமாக ஸ்வெரெவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அவர் காலிறுதிக்கும் தகுதி பெற்றார்.

ஸ்வரெவ் காலிறுதியில் அலெக்ஸி பாபிரின் உடன் மோத உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்