கனடா ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வேரெவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.;
கோப்புப்படம்
டொரன்டோ,
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி), ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன் உடன் மோதினார்.
தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த ஸ்வேரெவ் 7-6 (8-6), 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஆடம் வால்டனை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.