கனடா ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர்கள் விலகல்

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் 26ம் தேதி தொடங்குகிறது.;

Update:2025-07-21 11:06 IST

கோப்புப்படம்

டொரன்டோ,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதால் டென்னிஸ் ரசிகர்கள் இந்த தொடரை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

இந்நிலையில், இந்த தொடரில் இருந்து நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் விலகி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

காயம் காரணமாக கனடா ஓபன் தொடரில் விளையாடவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னணி வீரர்கள் விலகி உள்ளதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்