செங்டு ஓபன் டென்னிஸ்: அலெஜாண்ட்ரா டபிலோ அரையிறுதிக்கு முன்னேற்றம்
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.;
கோப்புப்படம்
பீஜிங்,
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஒ'கானல் - சிலியின் அலெஜாண்ட்ரா டபிலோ உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அலெஜாண்ட்ரா டபிலோ 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் கிறிஸ்டோபர் ஒ'கானலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.