சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: நாளை தொடக்கம்

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.;

Update:2025-10-26 17:43 IST

சென்னை,

2-வது சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.ஏ.250) போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நாளை (27-ந்தேதி) தொடங்குகிறது . நவம்பர் 2-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

இந்த டென்னிஸ் (டபிள்யூ.டி.ஏ.250) போட்டி 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் இந்த போட்டி நடைபெறவில்லை. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இந்த போட்டியை நடத்துகிறது.

இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.2.39 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 250 தரவரிசை புள்ளியுடன் ரூ.31. 58 லட்சமும், இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடிக்கும் ஜோடிக்கு 250 தரவரிசை புள்ளியுடன் ரூ.11.48 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்