சீனா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் தோல்வி கண்ட ஆண்ட்ரே ரூப்லெவ்

சீனா ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-09-26 15:43 IST

கோப்புப்படம்

பீஜிங்,

சீனா ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் - பிளேவியோ கோபோலி (இத்தாலி) உடன் மோதினார்.

இந்த மோதலில் அனுபவம் வாய்ந்த ரூப்லெவ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட பிளேவியோ கோபோலி, ரூப்லெவை வீழ்த்தினார்.

அவர் 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி கண்ட ரூப்லெவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்