சீன ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-09-30 06:27 IST

கோப்புப்படம்

பீஜிங்,

சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சின்னெர் (இத்தாலி) - ஹங்கேரியின் பேபியன் மரோஸ்ஸான் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பேபியன் மரோஸ்ஸானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்