சீன ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னர்

6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லெர்னெர் தியானை எளிதில் வீழ்த்தினார்.;

Update:2025-10-01 20:30 IST

பீஜிங்,

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லெர்னெர் தியான் உடன் மோதினார்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சின்னர், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் லெர்னெர் தியானை எளிதில் வீழ்த்தினார். இதன் மூலம் சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் சின்னர் 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்