சீனா ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
சீனா ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது.;
Image Courtesy: @NBOtoronto
பீஜிங்,
சீனா ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) - அஜ்லா டோம்ல்ஜனோவிக் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அஜ்லா டோம்ல்ஜனோவிக்கை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.