சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

கோகோ காப் காலிறுதியில் ஜாஸ்மின் பயோலினி உடன் மோதினார்.;

Update:2025-08-16 23:45 IST

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கோகோ காப் (அமெரிக்கா) - ஜாஸ்மின் பயோலினி (இத்தாலி) ஆகியோர் மோதினர்.

இதில் முதல் செட்டை கோகோ காப் எளிதில் கைப்பற்றினார். இதனால் இந்த ஆட்டத்தில் கோகோ காப் வெற்றி பெறுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பின்னர் எழுச்சி பெற்ற ஜாஸ்மின் பயோலினி அதிரடியாக விளையாடி அடுத்த 2 செட்டுகளை கைப்பற்றி கோகோ காபுக்கு அதிர்ச்சி அளித்தார்.

பயோலினி இந்த ஆட்டத்தில் 2-6, 6-4 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் அரையிறுதியில் வெரோனிகா குடெர்மெடோவா உடன் மோத உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்