சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் மவுடெட் வெற்றி

மவுடெட் முதல் சுற்றில் மெக்டொனால்ட் உடன் மோதினார்.;

Update:2025-08-08 15:42 IST

image courtesy:twitter/@CincyTennis

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நேற்று தொடங்கியது. அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் நூற்றாண்டு கால பழமைவாய்ந்த இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்றுள்ளார்கள்.

இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீரரான கோரன்டின் மவுடெட், அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்ட் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட மவுடெட் 7-5 மற்றும் 6-3 என்ற நெர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இவர் 2-வது சுற்றில் அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் மோத உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்