சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஸ்வியாடெக் காலிறுதியில் அண்ணா கலின்ஸ்கயா உடன் மோதினார்.;

Update:2025-08-15 22:30 IST

image courtesy:twitter/@CincyTennis

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை அண்ணா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-3 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்