சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நிஷேஷ் பசவரெட்டி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பசவரெட்டி 2-வது சுற்றில் ஸ்வெரெவ் உடன் மோத உள்ளார்.;

Update:2025-08-09 17:54 IST

image courtesy:twitter/@CincyTennis

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரரான நிஷேஷ் பசவரெட்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட பசவரெட்டி 7-6 மற்றும் 7-5 என்ற நெர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இவர் 2-வது சுற்றில் ஸ்வெரெவ் உடன் மோத உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்