சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

அரினா சபலென்கா , எலினா ரைபகினாவிடம் (கஜகஸ்தான்) மோதினார் .;

Update:2025-08-17 06:47 IST

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமும், நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்) எலினா ரைபகினாவிடம் (கஜகஸ்தான்) மோதினார் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 1-6, 4-6 என்ற நேர் செட்டில் அரினா சபலென்கா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். சின்சினாட்டி ஓபனில் முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ள ரைபகினா அடுத்து இகா ஸ்வியாடெக்குடன் (போலந்து) மல்லுகட்டுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்