துபாய் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
இவர் காலிறுதியில் மேட்டியோ பெரெட்டினி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.;
image courtesy:AFP
துபாய்,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான சிட்சிபாஸ் (கிரீஸ்), கரேன் கச்சனோவ் (ரஷியா) உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை சிட்சிபாஸ் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 7-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இவர் காலிறுதியில் மேட்டியோ பெரெட்டினி உடன் மோத உள்ளார்.