துபாய் ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன்

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.;

Update:2025-03-01 21:15 IST

image courtesy:twitter/@DDFTennis

துபாய்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் ஜோடி, ஹாரி ஹெலியோவாரா (பின்லாந்து)- ஹென்றி பேட்டன் (இங்கிலாந்து) இணை உடன் மோதியது.

இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை யுகி பாம்ப்ரி ஜோடி கைப்பற்றி வெற்றி பெற்றது. யுகி பாம்ப்ரி இணை இந்த ஆட்டத்தில் 3-6, 7-6 மற்றும் 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.


Tags:    

மேலும் செய்திகள்