பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் மார்செல்-ஹொரெசியோ ஜோடி சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-06-08 15:13 IST

Image Courtesy: @rolandgarros

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-ஜோ சாலிஸ்பரி ஜோடி, அர்ஜென்டினாவின் ஹொரெசியோ ஜெபெல்லோஸ்-ஸ்பெயினின் மார்செல் கிரனோலர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய மார்செல்-ஹொரெசியோ ஜோடி 6-0, 6-7 (5-7), 7-5 என்ற செட் கணக்கில் நீல் ஸ்குப்ஸ்கி-ஜோ சாலிஸ்பரி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

Tags:    

மேலும் செய்திகள்