ஹாலே ஓபன் டென்னிஸ்; மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
டேனியல் மெத்வெதேவ்(ரஷியா ), அமெரிக்கா வீரர் அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் மோதினார்.;
பெர்லின்,
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டேனியல் மெத்வெதேவ்(ரஷியா ), அமெரிக்கா வீரர் அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மெத்வெதேவ் 6-4,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் இதனால் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.