ஹாலே ஓபன் டென்னிஸ்; ஸ்வேரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி), இத்தாலியின் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.;

Update:2025-06-20 22:25 IST

பெர்லின்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி), இத்தாலியின் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அலெக்சாண்டர் ஸ்வேரெவ் 6-4, 7(8)-6(6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்