ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மோதினர்.;
பெர்லின்,
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பயோலினியை எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டி தகுதி பெற்றார்.