இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டி: மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா - ஆண்ட்ரீவா மோதல்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.;
image courtesy: twitter/@BNPPARIBASOPEN
இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா மற்றும் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா - ஆண்ட்ரீவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.