அல்காரசுடன் காதலா..? மனம் திறந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது.;

Update:2025-06-30 08:58 IST

image courtesy: instagram/ emmaraducanu/carlitosalcarazz

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. இதற்காக அனைத்து வீரர், வீராங்கனைகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தொடருக்காக இங்கிலாந்து பிரபல டென்னிஸ் வீராங்கனையன எம்மா ரடுகானு, உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் 22 வயதான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரசுடன் இணைந்து ஜாலியாக பயிற்சியில் ஈடுபட்டார். அத்துடன் அமெரிக்க ஓபனில் கலப்பு இரட்டையரில் இருவரும் இணைந்து விளையாட முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், ஒன்றாக சுற்றுவதாகவும் டென்னிஸ் வட்டாரத்தில் தகவல்கள் பரவின.

இது குறித்து சமீபத்திய பேட்டி ரடுகானுவிடம், அல்காரசுடனான உங்களது நட்பு குறித்து நிறைய பேசப்படுகிறது. வதந்திகளுக்கு பின்னால் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ரடுகானு, 'நாங்கள் நல்ல நண்பர்கள்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்