ஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்

இறுதிப்போட்டியில் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதுகிறார்.;

Update:2025-09-30 11:36 IST

கோப்புப்படம்

டோக்கியோ,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்கார்ஸ் (ஸ்பெயின்) - நார்வேயின் கேஸ்பர் ரூட் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 3-6, 6-3, 6-4 என்ர செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்