ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது.;
Image Courtesy: @atptour
டோக்கியோ,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.