ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட ஹோல்கர் ரூனே
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.;
கோப்புப்படம்
டோக்கியோ,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஹோல்கர் ரூனே (டென்மார்க்) - அமெரிக்காவின் ஜென்சன் ப்ரூக்ஸ்பி உடன் மோதினார்.
இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹோல்கர் ரூனே, யாரும் எதிர்பார்க்கா வண்ணம் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் ஜென்சன் ப்ரூக்ஸ்பி-யிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.